சொல் பொருள்
(பெ) 1. அனுபவம், அனுபவிப்பு,
2. வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்ளுதல்,
3. உண்ணுகை
சொல் பொருள் விளக்கம்
அனுபவம், அனுபவிப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
experience, enjoyment
receiving as much as you require
eating, feeding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெரும நின் – ஐங் 368/3,4 குளிர்ச்சியான பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்பத்தின் அனுபவிப்பை எம்மோடும் கொள்வாயாக, பெருமானே! அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி புரிந்து ஆர்க்கும் வண்டொடு – கலி 30/1-3 அரிய தவத்தைச் செய்தவர்கள் வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்வது போல, அழகாக மலர்ந்து கொள்ளாத கிளைகள்தோறும் வேண்டிய அளவு தேனை அமர்ந்து உண்டு களித்து ஆரவாரிக்கும் வண்டுகளோடு பருதி உருவின் பல் படை புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/7-9 வட்டமாகிய வடிவினையுடைய பல படையாகச் செய்யப்பட்ட மதிலால் சூழப்பட்ட வேள்விச்சாலையுள் பருந்து உண்பதற்காகச் செய்யப்பட்ட இடத்தில் நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்