சொல் பொருள்
(பெ) பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து,
சொல் பொருள் விளக்கம்
பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Unexpanded tender leaf of palmyra, plantain, etc.,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சோலை வாழை சுரி நுகும்பு – குறு 308/1 சோலை வாழையின் சுருண்ட குருத்து புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13 புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில் பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு – புறம் 249/5 பனையின் குருத்தை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3 வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்