சொல் பொருள்
(பெ) 1. வளைவு, 2. வளைந்து வளைந்து ஆடும் ஆட்டம், 3. வளைந்தும் நெளிந்ததுமான அசைவுகள்,
சொல் பொருள் விளக்கம்
வளைவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bending, curving, dancing by bending, short writhing movements by swaying and wriggling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/1,2 முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10 நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும், சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து நின் வெம் காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே – ஐங் 71/1-3 வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்