சொல் பொருள்
தள்ளு, முறி
சொல் பொருள் விளக்கம்
தள்ளு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
push, thrust aside, cut down
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் – பரி 16/45,46 காற்றால் எடுக்கப்பெற்ற மூங்கில் மேலே கிளர்ந்து, அக்காற்றின் தள்ளுதலால் உயர்ந்து தாக்குதலால் தேன் சோர்ந்து விழும் வரையை ஒக்கும் தோற்றம் ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பில் – பரி 9/27,28 சந்தன மரங்களையுடைய ஊழால் மெலிந்த கரையை முறித்து வையைப்புனல் கொண்டுவந்த வயிரம்பாய்ந்த சந்தனத்தினது புகை சூழ்ந்த மாலையையுடைய மார்பில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்