சொல் பொருள்
கொன்றுகுவி, கொன்று குவித்தல்
சொல் பொருள் விளக்கம்
கொன்றுகுவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slay in heaps, killing in heaps
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம் பட கடந்து நூழிலாட்டி புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 87,88 வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின் (வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து, சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு வள்ளை நீக்கி வய மீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் வேழ பழனத்து நூழிலாட்டு – மது 255-257 வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு, 255 (தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர், கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்