சொல் பொருள்
நோட்டம் – உள்ளாய்வு
சொல் பொருள் விளக்கம்
“போகிறவர்கள் வருகிறவர்களை நோட்டம் பார்க்கிறானே என்ன? இவன் யார்? எந்த ஊரான்?” என்பது சிற்றூர்களில் கேட்கப்படும் செய்தி. களவு திருட்டு முதலிய குற்றங்கள் ஊரில் நடந்துவிட்டால் ஊரவர்களே நோட்டம் பார்ப்பர். தங்கம், முத்து, மணி முதலியவற்றின் தரம் காண்பதற்கு முற்காலங்களில் ‘நோட்டகாரர்’ என்பார் இருந்தனர். ஒற்றர்கள் என்பாரும் நோட்டகாரரே. இத்தகைய நோட்டம் பருப்பொருள் ஆய்வில் இருந்து நுண்பொருள் ஆய்வுக்கும், வெளிப்படும் ஆய்வில் இருந்து உள்ளாய்வுக்கும் மாறிவந்துள்ளதை வழக்கால் அறிய முடிகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்