சொல் பொருள்
பொறுமைகாட்டு, வலிய
சொல் பொருள் விளக்கம்
மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
endure, strong, mighty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163 (பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையும் (அவற்றில்)வெற்றிபெறும் தீவிர முனைப்பினையுமுடைய உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4 தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும், நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55 வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்த கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252 கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில் வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176 வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2 ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில் வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7 வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்