சொல் பொருள்
(பெ) 1. காளை, எருது, 2. பெரியது, 3. ஆண் யானை, 4. வலிமை
சொல் பொருள் விளக்கம்
1. காளை, எருது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bull, Ox, largeness, hugeness, male elephant, strength, might
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7 உழுத வலிய காளை, பின் வைக்கோலைத் தின்னாற்போல பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52 பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும், உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு ஒளி திகழ் ஓடை பொலிய – புறம் 161/17,18 உயர்ந்த கொம்பினை ஏந்திய மலையைப்போன்ற வலிய களிற்றை ஒளி விளங்கும் நெற்றிப்பட்டம் பொலிய ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் – புறம் 88/3,4 பாடம் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத் தலைவனாகிய சுடர்விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த அழகிய வலிய மார்பினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்