Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காலைமுதல் மாலைவரையுள்ள காலம், 2. பகுத்தல், 3. நுகத்தாணி, 4. ஊழிக்காலம், 5. இளவெயில்,

சொல் பொருள் விளக்கம்

1. காலைமுதல் மாலைவரையுள்ள காலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

day time, dividing, separating, Middle or main peg in a yoke, the day of destruction of the universe;, morning sunlight

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 387

மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி;

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653

தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,

கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்நெடு நுகத்து பகல் போல – பட் 205-207

வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
நீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்

துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – பதி 72/8

எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலம் நுழைகின்ற போதில்

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96

சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள், (அந்த அசோகந்தளிரின் செம்மையால்)
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி
சூடிக்கொண்டாள்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *