சொல் பொருள்
ஊடுபயிர்
சொல் பொருள் விளக்கம்
விதைக்கப்பட்ட பயிரின் ஊடுபயிராக ஊன்றப்பட்ட பயிரைப் பக்கப்பயிர் என்பது சங்கரன்கோயில் வட்டார வழக்கு. ஊடுபயிர் என்பது பொது வழக்கு. ஒரு பயிரின் ஊடுபயிராக மூன்று நான்கு போடுவது கொடுமுடி உழவர் வழக்கமாகும். மஞ்சள் பயிரின் ஊடு, துவரை, அகத்தி, உள்ளி என்றும், வெண்டை, கொத்தவரை என்றும் போடுவர். அத்தனைக்கும் ஈடுதர உரமும், நீரும், களையெடுப்பும், காவலும் புரிவர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்