சொல் பொருள்
பசப்புதல் – நயமாகப் பேசி ஏய்த்தல்
சொல் பொருள் விளக்கம்
இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகையெல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்குகிறது. நினைவு சொல் செயல் ஆகிய முந்நிலைகளிலும் ஏமாறச் செய்தல் பசப்புதலாக வழங்குகின்றது. அந்தப் பசப்பெல்லாம் இங்கு வேகாது என்பது ஒரு மரபுத் தொடர். “வேகாது” என்பதும் வழக்குச் சொல்லே, நிறைவேறாது என்பது பொருள். அவனோடு அவனாகிப் பசைபோல் ஒட்டிப் பசப்பினாலும் வெற்றிபெற முடியாது போகும் இடமும் உண்டு. அத்தகையர் பசுப்புதலைக் குறிப்பால் உணரும் திறமிக்கவராம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்