சொல் பொருள்
பச்சை காட்டல் – வழி பிறத்தல்
சொல் பொருள் விளக்கம்
பச்சைக்கொடி காட்டல் என்பதும் இது. தொடரி புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக்கொடி காட்டிவிட்டால் “தடையில்லை; போகலாம்” என்பதற்கு அடையாளம். அதுபோல், பெற்றோர் சம்மதித்து விட்டாலும், தனக்கு மூத்த ஆணோ, மணப்பருவம் வாய்ந்த பெண்ணோ உடன் பிறந்தாருள் இல்லாவிடினும், “இனி என்ன பச்சைக்கொடி காட்டியாயிற்று; மண ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே” என்பர். பச்சைக் கொடிகாட்டல் தடையில்லை என்னும் பொருளின் வழி, வழி பிறத்தலைக் காட்டுவதாம். வீட்டில் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் என ஒப்புதலால் உவப்பார் மிகப் பலர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்