சொல் பொருள்
பச்சை நோட்டு – நூறு உரூபாத்தாள்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் மாட்டை விற்க – வாங்கத் தாம்பணிக்குப் போகுங்கால், இடைத் தரகர் வாங்குவார் விற்போர் இடையே, வாயால் பேசாது கை விரலால் பேசுவது வழக்கம். அவர்கள் அதற்கெனச் சில குறியீடுகள் வைத்துளர். சில விரல்களைப் பிடித்து இத்தனை பச்சை நோட்டு என்பர். பச்சை நோட்டு என்பது நூறு உருபா என்பதாம். கடுவாய் நோட்டு என்றாலும் நூறு உருபாவேயாம். மற்றை உருபா நோட்டுகளினும், நூறு உருபா நோட்டு வண்ணம் வேறுபட்டுப் பச்சையாக இருந்திருத்தல் வேண்டும். இல்லையேல் பச்சை செழிப்பு ஆதலால் வளமான பெரிய தொகை. நோட்டைக் குறித்திருத்தல் வேண்டும். நோட்டு = பணத்தாள்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்