சொல் பொருள்
(வி) 1. பரவு, 2. வந்துசேர், 3. செல், 4. மறைந்து மறைந்து வா, 5. குதித்துக்குதித்து நட
சொல் பொருள் விளக்கம்
1. பரவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread, fan out, reach, leave, go, move unnoticed, walk with jumps
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2 பசிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர் எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன் —————- ————————— நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – அகம் 210/1-6 குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலையுடைய கொடிய பரதவரால் எறியப்பட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன் —————- ————————— வரிசையாக உள்ள படகின் பக்கலில் வந்துசேரும் துறையினையுடைய நம் தலைவன் வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் இ சுரம் படர்தந்தோளே – அகம் 7/11-13 வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு, தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள் இந்த வழியே சென்றுவிட்டாள்; கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/23,24 கள்வர்கள் மறைந்து மறைந்து வருவதைப் போல், எம்மை எள்ளி நகையாடற்பொருட்டே இவர் வந்திருக்கிறார் இங்கு புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை இருவி இருந்த குருவி வருந்து_உற பந்து ஆடு மகளிரின் படர்தரும் குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/3-6 தினைப்புனத்தார் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில், கதிர் அறுத்த மொட்டைத் தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக, பந்தாடும் மகளிரைப் போன்று குதித்துக் குதித்துச் செல்லும் குன்றுகளைச் சேர்ந்த நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்