சொல் பொருள்
படிதாண்டாமை – கற்புடைமை
சொல் பொருள் விளக்கம்
படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையென்றால் படியைத் தாண்டாமல் யாரால் தான் இருக்க முடியும்? வாயிற்படி மட்டும் தானா படி? ஏணிப்படி, வண்டிகளில் படிக்கட்டு இவற்றையெல்லாம் தாண்டாமல் ஒருவர் வாழ முடியுமா? படி என்பது வழிவழி வந்த ஒழுக்கம். படிமை, படிவம் என்பவை ஒழுக்கம் குறித்தல் அறிக. ஆதலால், ஒழுக்கம் தவறாமை என்னும் பொருளில் வழங்குவதாம். அடுத்தவர் வீட்டுப்படி தாண்டாமை என விளக்குவது பொருந்தாது என்பதை அறிக. அது சிறை காக்கும் காப்பு, நிறை காக்கும் காவல் ஆகாதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்