Skip to content

சொல் பொருள்

(பெ) பகைவலி

சொல் பொருள் விளக்கம்

பகைவலி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

valiant hatred

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி – பரி 4/16-18

உன்னுடன் நன்றாக நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி,
உன்னிடம் ஒன்றாத உறவுகொண்ட இரணியனுடைய பெரிய மலை போன்ற மார்பின்கண்
பகைவலி அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து

பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரி 4/47,48

பாம்பின் பகையின் செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன்
கொடியில் இருக்கும் கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே!

படிமதம் – பகைவலி – படிபிரதி என்பதன் சிதைவு – பொ.வே.சோ.உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *