சொல் பொருள்
(பெ) தவம்
சொல் பொருள் விளக்கம்
தவம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
penance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என வேறு படு நனம் தலை பெயர கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/24-28 உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான புரோகிதனை, கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும், தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி நாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி கூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்