சொல் பொருள்
படுக்காளி – ஒழுக்கக்கேடன்
சொல் பொருள் விளக்கம்
படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு மூஞ்சித்தனத்தைக் குறிப்பதன்று. பால் விழைச்சால் நாளும் பொழுதும் எங்கெங்கும் தேடிக் கிடப்பானைக் குறிப்பதாம் இச்சொல். அவனைக் குறிக்க மட்டும் வழங்குவதன்று; அவளைக் குறிக்கவும் இடம் பெறும். “பெரிய படுக்காளி; எப்படி உருப்படும்” என்பது இருபாலுக்கும் இயைவதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்