சொல் பொருள்
(பெ) ஒரு சிவ நடனம்
சொல் பொருள் விளக்கம்
ஒரு சிவ நடனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a dance of Lord Siva.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/8-10 மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து, பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்