பதம் என்பது பக்குவம், உணவு
1. சொல் பொருள்
(பெ) 1. பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை, 2. வேகவைத்த உணவு, சோறு, பக்குவமாகச் சமைக்கப்பட்ட ஒரு பொருள் 3. செவ்வி, தகுந்த தருணம், 4. ஈரம் 5. தரம்
2. சொல் பொருள் விளக்கம்
பதம் என்பது பக்குவம் என்ற பொருள் தரும். நன்றாக வெந்த சோற்றை அவிழ் பதம் என்பர். தயிரைக் கடைந்து பக்குவமாக வழித்து எடுக்கப்படும் வெண்ணெய் பதம் எனப்படும். பக்குவமாகச் சமைக்கப்பட்ட ஒரு பொருள் பதம் என்று சொல்லப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
required degree of hardness or softness, quality or fitness, cooked food, boiled rice, opportune moment, moisture, dampness, capacity
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10
காய்ந்து புலரும் பக்குவத்தை எய்தின தினையின் கதிர்கள்.
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157
வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
‘நன்றாக வெந்த சோற்று உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட,
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச் செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
அரிய காத்தல் தொழிலையுடைய காவலர் சோம்பியிருக்கும் தகுந்த நேரத்தைப் பார்த்து
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/1,2
மலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில்
மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்
இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசிலாக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் – புறம் 151/3-5
ஆபரணங்களை அணிந்து
புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியைப் பரிசிலாகக் கொண்டு
அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில்கொடுக்கும்
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 111
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 393
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை – மலை 121
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் – மலை 252
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – நற் 4/3
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/3
கொய் பதம் குறுகும்-காலை எம் – நற் 57/9
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி – நற் 98/9
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/2
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/11
கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/10
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக – குறு 83/1
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் – குறு 141/6
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி – குறு 241/4
புலர் பதம் கொள்ளா அளவை – குறு 372/6
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/2
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் – ஐங் 400/3
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – பதி 55/11
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் – பதி 66/9
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம்/மனைமாமரம் வாள்வீரம் – பரி 11/18,19
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/13
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் – அகம் 49/14
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி – அகம் 58/12
மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின் – அகம் 73/13
ஏறு முந்துறுத்து சால்பதம் குவைஇ – அகம் 249/7
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்/ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/4,5
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து – அகம் 316/13
தண் பதம் படுதல் செல்க என பன் மாண் – அகம் 345/2
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை – அகம் 367/7
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/6
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை – அகம் 376/6
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/16
கொள் பதம் ஒழிய வீசிய புலனும் – புறம் 23/7
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்/மதுகை இன்றி வயிற்றுதீ தணிய – புறம் 74/4,5
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/6
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது – புறம் 96/6
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/11
கனி பதம் பார்க்கும் காலை அன்றே – புறம் 139/10
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து – புறம் 159/12
நல்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/5
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா – புறம் 353/10
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்