சொல் பொருள் விளக்கம்
(பெ) அறுகம்புல்
பதன் – (பெ) பார்க்க : பதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bermuda grass
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. பக்குவம் பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/1,2 பழைய மழை பொழிந்ததாக, சரியான பக்குவம் கெட்டு விழுந்த உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில் 2. சோறு தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் – அகம் 79/1 தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய ஆடவர்கள் 3. செவ்வி, தக்க தருணம் அரும் கடி காவலர் சோர் பதன் ஒற்றி – அகம் 2/14 கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/4-6 பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான் செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்