சொல் பொருள்
(வி) 1. அழுந்தக் கிடத்து, 2. ஆழ்த்து, (பெ) 1. ஊர், 2. இருப்பிடம், உறைவிடம்,
சொல் பொருள் விளக்கம்
1. அழுந்தக் கிடத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
insert, ingraft, sink, village, town, dwelling place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடலை வாளர் தொடுதோல் அடியர் குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 636,637 தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்; தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும், அறு சுனை முற்றி உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/3-5 நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று, ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள் விரைவாகத் தம் துதிக்கைகளை நீரில் ஆழ்த்த, அதனால் தம் கைகள் சுடப்பட்டு பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65 பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46 வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்