சொல் பொருள்
வி) ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,
சொல் பொருள் விளக்கம்
ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stay in a place for a long time, get acquainted with a place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஆயமொடு பதிபழகி வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 213,214 பல்வேறுபட்ட மக்கட்கூட்டத்தோடு பல நாடுகளிலும் சென்று பழகி வெவ்வேறான உயர்ந்த அறிவுகள் நிரம்பப்பெற்ற சுற்றத்தினையுடையவராகிய சான்றோர் பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை – புறம் 393/1 தொடக்க முதலே ஓரிடத்தில் தங்கி அதனைப் பழகியறியாத துன்ப வாழ்க்கையில் போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14 அவன் ஊர்க்கண்ணே இருந்தேனாகவும் கழிந்த நாட்களை அறியேனாயினன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்