சொல் பொருள்
பயிர் – தவசம் விளையும் பயிர்வகை.
பச்சை – பயறு விளையும் செடி கொடி வகை
சொல் பொருள் விளக்கம்
நெற்பயிர், சோளப்பயிர் என்பவற்றால் பயிர் தவச வகைக்காதல் விளங்கும். பயற்றுக்கொடிகளில் பச்சை என்பதொன்று உண்டு. பச்சைப் பயறு, பாசிப் பயறு என்பவை அது. ‘மை’ என்பது மயில் மூலம் போலப் ‘பை’ என்பது ‘பயிர்’ மூலமாம்; அதனின் வேறுபடுத்து அதே பொருள் தருதற்கு வந்ததே பச்சை என்பதாம். பசுமை வண்ணம் சார்ந்ததால் வந்த பெயர். பின்னே வேக வைக்காத பொருளைச் சுட்டுவதாக அமைந்தது. பச்சைக் காய்கறி, பச்சை ஊன் என்பவை அவை. பின்னே பக்குவமற்ற பேச்சைப் ‘பச்சையாகப் பேசுதல்’ என வழக்கூன்றியது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்