Skip to content

பரத்தரு(தல்)

சொல் பொருள்

(வி) பரவு(தல்)

சொல் பொருள் விளக்கம்

பரவு(தல்)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

spread(ing)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39

வயல்களின் உழவர்கள் பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்;

தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/31-33

தம்முடைய மேய்ச்சல் புலத்தில் காளைகளை மேய்வதற்காக பரவவிட்ட தம்
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர் தழுவிக்கொண்டு( ஆடும் குரவைக்கூத்து)

பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9

பால் எனப் பரவிய நிலாவினைக்கொண்ட மாலைப்பொழுது

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/7

புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்
மாலை வேளை;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *