சொல் பொருள்
(வி) பார்க்க : பரவு
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பரவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. புகழ்ந்துகூறு பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் மெய் பனி கூரா அணங்கு என பராவலின் பலி கொண்டு பெயரும் பாசம் போல திறை கொண்டு பெயர்தி – பதி 71/21-24 பெரிய ஆண்யானைகளோடு, அருமையான அணிகலன்களையும் திறையாகத் தந்து, மேனி மிகவும் நடுக்கமுற்று, தெய்வமேயென்று உன்னைப் புகழ்ந்து நிற்க, பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல, பகைவரின் திறையைமட்டும் எடுத்துக்கொண்டு மீளுகின்றாய் 2. வணங்கு, துதி பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230 மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்