பொருள்
- பருத்தவன்
- உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு
- மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது உண்டு
விளக்கம்
பருத்தவன் பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு. பரும்படியானது. பருவட்டானது, பருவொட்டானது என்பவையும் இத்தகையன. பருத்தவன் தடித்தவன் ஆவன். உடல் தடிப்பும் உள்ளத்தடிப்பும் கூட பருத்ததாகச் சொல்லப்படும். செருக்கைத் தலைக்கனம் என்பதில்லையா; அதுபோல் என்க. மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது, பருமை வன்மை எனக் கொண்ட பொருளின் வழித்தாம்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்