பருமல் என்பதன் பொருள்பருத்த மரக்கை,படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம்(கப்பற் குறுக்குமரம்)
1. சொல் பொருள்
பருத்த மரக்கை
படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் – மூங்கில் கழை.
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Yard-arm in a fishing or coastwise trading boat
Yard-arm in a wooden sailing vessel used in India
3. சொல் பொருள் விளக்கம்
பருத்த மரக்கை பருமல் எனப்படும். பருத்தது பருமன் ஆதல் போலப் பருமல் எனப்பட்டதாம்.கப்பலுக்குரிய குறுக்கு மரத்தின் கை பருமல் எனப்படும் என்பதைச் சுட்டுகிறது செ.ப.க. அகராதி.
படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் – மூங்கில் கழை – பருமல் என்று மீனவர்களால் வழங்கப்படுகிறது. பழநாள் மரக்கால், நாளி என்பவை மூங்கிலால் அமைந்தவை என்பதை அறிந்தால் அதன் தடிப்பு ஆகிய பருமை புலப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்