சொல் பொருள்
பற்றுப் போடல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப்போடல் இயற்கை. சொல்லியதைக் கேட்காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல்பவர்கள் “ஒழுங்காக வேலை பார்க்கிறாயா? பற்றுப் போட வைக்க வேண்டுமா?” என்பர். பற்றுப்போட வைத்தல் என்பது அடித்து வீக்கம் உண்டாக்குதலும், வலியுண்டாக்குதலும் நிகழும் என்பதாம். ஈ மொய் த்தல், பிடித்து விடல் என்பன காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்