சொல் பொருள்
பலுகுதல் – பெருகுதல், கூடுதல்
சொல் பொருள் விளக்கம்
பல்குதல் பெருகுதல் பொருளது, அது பலுகுதல் என்றும் வழங்கும். “ஒரே ஆடு வாங்கினோம் நன்றாகப் பலுகி நாலாண்டில் நாற்பது உருப்படிக்கு மேல் ஆகிவிட்டது” என்பதில் பலுகுதல் என்பது பெருகுதல் பொருளில் வருதல் அறியலாம். பெருகுதல் கூடுதல்தானே, “வீடெல்லாம் எலி பலுகி விட்டது; பூனை வளர்த்தால்தான் சரிப்படும்” என்பதும் வழக்கே. ஆடு மாடுகள் கருக்கொள்ளல் பலப்படுதல் என்றும், குட்டி கன்று போடுதல் பலுகுதல் என்றும், பூவில் பலன் பிடித்தல் என்றும் வழங்கும் வழக்குகள் ஒப்பிட்டறியத் தக்கன.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்