Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பல, 2. எயிறு

சொல் பொருள் விளக்கம்

1. பல

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

many, tooth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்,

முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/12,13

முல்லை அரும்பினை வரிசையாக நிறுத்தினாலொத்த வண்டுகள் விரும்பும் வெண்மையான பல்லினையும்
புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை வாய்ந்த பவளம் போன்ற வாயினையும் உடையளாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *