சொல் பொருள்
பல்லைப் பிடுங்கல் – அடக்குதல்
சொல் பொருள் விளக்கம்
நச்சுப் பாம்புக்குப் பல்லில் நஞ்சுண்டு. அதனால் பாம் பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப் பல் ஒழிந்த பல்லால் கடித்தால், அதனால் உயிர்க் கேடு வராது. ஆதலால் நச்சுப் பல்லைப் பிடுங்குதல் அதனை அடக்குவதாக அமைந்தது. அவ்வழக்கில் இருந்து பல்லைப் பிடுங்குதல் என்பது ஆற்றலைக் குறைத்து அடக்குதலைக் குறிப்பதாயிற்று. “அவன் பல்லைப் பிடுங்கியாயிற்று; இனி என்ன செய்வான்” என்பது வழக்குரை. பல்லைப்பிடுங்கல் செல்வம் வலிமை முதலியவற்றை அழித்து அடக்குதலாம். வாயைப் பிடுங்குதல் வேறு என்பதை ஆங்குக் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்