Skip to content

சொல் பொருள்

(பெ) 1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல், 2. உருண்டையான பளபளப்பான கல்

சொல் பொருள் விளக்கம்

1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

crystal, marble, polished globular marble

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/5,6

களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள்

களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில்
ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும்

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57

பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,

அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12

நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை ஒப்ப

மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல்கோள் நெல்லி பைங்காய் – அகம் 399/13,14

குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *