Skip to content

சொல் பொருள்

(பெ) 1. துயிலிடம், 2. துறவி மடம், 3. தூக்கம், 4. சாலை, அடைப்பு, 5. பௌத்தர்களின் கோயில், 6. தொழும் இடம்

சொல் பொருள் விளக்கம்

1. துயிலிடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sleeping place, bed, hermitage, sleep, enclosure, temple of Buddhists

worship place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
—————- ——————-
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 42-46

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
—————— ——————
காட்டு மல்லிகையாகிய படுக்கையில் துயில்கொள்ளும்

தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 53-56

தவஞ்செய்யும் பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,

சிலம்பில் போகிய செம்முக வாழை
——————— ——————-
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3

மலையில் நீண்டு வளர்ந்த செவ்வாழை
——————— ——————-
துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்

ஒதுக்கு இன் திணி மணல் புது பூம் பள்ளி
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/20,21

இயங்குதற்கு இனிய செறிந்த மனலையுடைய புதிய பூவையுடைய சாலையினது
வாயிலின்கண் மாடங்கள்தோறும் செம்மறிக்கிடாயைக் கொல்ல

காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 465-467

ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும்

குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 474

மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *