சொல் பொருள்
பள்ளி எழுச்சி – வசை
சொல் பொருள் விளக்கம்
திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சிபாடல் உண்டு அஃது இறைவர் புகழ் பாடுவது. அரசர் தம் அரண்மனைகளில் பள்ளி எழுச்சிபாடும் வழக்குப் பண்டு இருந்தது. அவ்வழக்கில் இருந்து இறைவர்க்கு ஏற்படுவதாயிற்று! கோயில், அரண்மனை, இறை’ என்பவை பொதுமை சுட்டுவன அல்லவோ! இசைப் பொருள் தரும் பள்ளி எழுச்சி வசைப் பொருளில் வழங்குவதும் வழக்காம். காலையில் உறக்கம் நீங்காமல் படுத்திருப்பவரைத் திட்டி எழுப்புவது வழக்கம். திட்டலோடு விடாமல் தண்ணீர் தெளித்து எழுப்ப நேர்வதும் உண்டு. திட்டி எழுப்புவதைப் பள்ளி எழுச்சி பாடுவதாகக் கூறுவர். “விடிந்தால் பள்ளி யெழுச்சி பாடாமல் இருக்கமாட்டீர்களே” என்பது வைகறை எழாதான் வைவுரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்