சொல் பொருள்
(பெ) 1. துன்பம், 2. மெலிவு
சொல் பொருள் விளக்கம்
1. துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
distress, affliction, loss of strength or power
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு வெளிறு இல் காழ வேலம் நீடிய பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/7-9 களிறு உதைத்து உழப்புவதால் கவிழ்க்கப்பட்ட மண்ணினால் எழுந்த நுண்ணிய மண்துகள், உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த துன்பம் நிறைந்த பழைய பாதைகளை மறைக்கும் மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/7-10 பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும், மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின் பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்