Skip to content

சொல் பொருள்

(வி) 1. வாழ்த்து, 2. வணங்கு, 3. புகழ்,

சொல் பொருள் விளக்கம்

1. வாழ்த்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

greet, bless, worship, praise

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 476

பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,

செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 201

நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வணங்க

நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 694,695

நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது புகழ்ந்து,
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *