சொல் பொருள்
பழுத்துப்போதல் – தோல்வி, உதவாமை
சொல் பொருள் விளக்கம்
இலை பழுத்துப் போனால் கட்டு விட்டு உதிர்த்துவிடும். ஆதலால் பழுத்தல் என்பது உதிர்ந்து விழுதல் அல்லது உதிர்தலைக் குறித்தது. “உன் ஆட்டம் பழுத்துப்போயிற்று” என்று விளையாட்டில் சொல்வது தோற்றுப் போயிற்று என்னும் பொருளதாம். சில காய்கள் பழுத்தால் பயன் தராது. பாகற்காய் பழுத்தாலும் கத்தரிக்காய் பழுத்தாலும் பயன்படாது. அதிலும் பிஞ்சிலே பாகல் பழுத்தால் வெம்பி உதிர்ந்துவிடும். அந்நிலையில் பழுத்தல் என்பது பயனின்மைப் பொருளதாம். “பிஞ்சிலே பழுத்தவன்” எனப் பழித்தலும் வழக்கில் உள்ளதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்