சொல் பொருள்
(வி) 1. நிறைவடை, 2. முதிர்வடை, 3. முற்றுப்பெறு
சொல் பொருள் விளக்கம்
1. நிறைவடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be full or perfect
mature
be fully grown or developed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீமிசை – மலை 578,579 வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள), மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில் இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் நெடும் கண் ஆடு அமை பழுநி – அகம் 348/5,6 தேனுடன் கூட்டியாக்கியவண்டு மொய்க்கும் அரியலாகிய அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடிது இருந்து முதிர்தலின் நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36 நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்