சொல் பொருள்
பழையது – பழஞ்சோறு
சொல் பொருள் விளக்கம்
பழையது பழைமையானது எனப் பொதுப் பொருள் தருவது. ஆனால் “பழையது உண்டேன்” என்னும்போது ஆறிப்போய் நீர்விட்டு வைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம். பழையதில் வெந்நீர்ப் பழையது, வடிநீர்ப் பழையது. தண்ணீர்ப் பழையது என மூவகை. எனினும் அவையெல்லாம் மறுநாள் அளவிலேயே பழையதாக முடிகின்றது. இறைவியைப் பழையோள் என்பதும், பாண்டியரைப் பழையர் என்பதும், வழிவழி நட்பைப் பழைமை என்பதும், வழிவழி வீரக் குடியைப் பழங்குடி, முதுகுடி என்பதும் காலப்பழமையில் சாலமுந்தியவாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்