சொல் பொருள்
(பெ) 1. பரப்பு, பரவுதல், 2. நெசவுப்பா, பாவு நூல்,
சொல் பொருள் விளக்கம்
1. பரப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
expanse, spreading out, warp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190 மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8 பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு படு மணி இரட்டும் பா அடி பணை தாள் நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/3,4 ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி இசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய உயர்ந்த நல்ல யானையினையும்தேரையும் குதிரையையும் துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4 ஆடை ஆய்ந்து நெய்யுங்கால் பாவானது விரிந்தது போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்