சொல் பொருள்
(வி) 1. பரப்பு, 2. பரவு,
சொல் பொருள் விளக்கம்
1. பரப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get spread, spread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் பூ கொன்றை தாஅய நீழல் பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278 ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில், பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று, செல்லிய முயலி பாஅய சிறகர் வாவல் – ஐங் 378/1,2 பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய வௌவால் மா கடல் முகந்து மணி நிறத்து அருவி தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/6,7 கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவி, அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7 அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்