சொல் பொருள்
(பெ) 1. (யானைப்)பாகன் என்பதன் பன்மை, 2. குழம்பு, 3. பாகு, 4. தேர்
சொல் பொருள் விளக்கம்
1. (யானைப்)பாகன் என்பதன் பன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elephant drivers, mahouts, thickened broth, thick liquid, Treacle, sweet syrup, car
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327 பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின் மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு, (விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் யானைப்பாகருடைய ஆரவாரமும் தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் இனிது என கணவன் உண்டலின் – குறு 167/4,5 தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை “இனிது” என்று கணவன் உண்டலின் பாகர் இறை வழை மது நுகர்பு- பரி 11/66 பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258 ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்