சொல் பொருள்
பாக்கு வைத்தல் – அழைத்தல்
சொல் பொருள் விளக்கம்
திருமண அழைப்பிதழ் அடித்து வழங்கும் வழக்கம் புதியது. முன்பு “பாக்கு வைத்தல்” ‘என்பதே அழைப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கு வைத்தல் என்பதன் சுருக்கமே பாக்கு வைத்தலாம். பாக்குவைத்தல் என்பது அழைப்புப் பொருள் தருதலானமையால், “உங்களைப் பாக்கு வைத்து அழைத்தேனா” என்னும் பொருளில் “பாக்கா வைத்தேன்” என்பது உண்டு. “அழையாமல் வந்துவிட்டு, அடாவடித்தனம் வேறா” என்பது போல் இழிவுறுத்தும் பொருளில் வழங்குகின்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்