சொல் பொருள்
பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர்
சொல் பொருள் விளக்கம்
கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச் சுவர் எழுப்புவது வழக்கம் அச் சுற்றுவெளிக்கு ஆளோடி என்பது பெயர். இது கல்வெட்டுகளிலும் உண்டு. பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர். பாம்பின் சட்டை அப் பகுதியில் கிடத்தல் கண்டு அப் பெயரீடு உண்டாகியதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்