சொல் பொருள்
பாய்ச்சல் நடக்காது – சூழ்ச்சி நிறைவேறாது
சொல் பொருள் விளக்கம்
ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை, பாய்ச்சல் காட்டலாம். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொள்ளவும் தீராப்பகையாய் முட்டிக் கொள்ளவும் செய்தலின் மாறா இன்பங் காணும் மனத்தர் அவர், அவர்தம் இயல்பைப் பாய்ச்சல் காட்டப் படுவாருள் எவரேனும் ஒருவர் தெளிந்து காண்பவராக இருந்தால் அந்தப் பாய்ச்சலை இங்கே காட்டாதே; உன் பாய்ச்சல் இங்கே நடக்காது என வெளியாக்கி விடுவர். பாய்ச்சல் காட்டாமலே பாய்ச்சல் நடத்துவது பாச்சை! அதன் வாழ்வே பாய்ச்சல்; இப்பாய்ச்சல் கேடு போன்ற கேட்டை ஆக்குவதன்று அப்பாய்ச்சல் அங்கே முட்டு இல்லையே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்