பாரம் என்பது பருத்தி
1. சொல் பொருள்
(பெ) 1. பொறுப்பு, கடமை, 2. பெரும் குடும்பம், 3. சங்க கால ஊர்(நெடும்பாரம், பனம்பாரம்), நன்னன் என்பானது தலைநகரம், 4. சங்க கால ஊர், மிஞிலி என்பான் காவல்காத்து நின்றது, 5. பருத்தி, 6. சுமை, சுமைப்பளு, கனம், 7. தலைவலி8. ஒப்புவிக்கை, 8. குதிரைக் கலனை, 9. கவசம், 10. தோணி, 11. காவு தடி, 12 கரை, முடிவு, 13. ஒரு எடையளவு, 14. பூமி
2. சொல் பொருள் விளக்கம்
ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு. இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி இனங்களில் பின்வரும் வகைகள் உள்ளன.
- வெள்ளைக்கண்ணி,
- நாடன் பருத்தி,
- கருங்கண்ணி,
- ‘உப்பம்’ பருத்தி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
responsibility, large family, indian cotton plant, Cotton, Gossypium herbaceum, Gossypium Barbedense, Gossypium Peruvianum, Gossypium hirsutum, Gossypium Arboretum, Burden, ache.ex. headache
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி – பதி 13/24 குடிமக்களைக் காக்கும் காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35/32 ஏரைப் பாதுகாப்போருடைய குடும்பங்களைப் பாதுகாத்து பசித்தும் வாரோம் பாரமும் இலமே – புறம் 145/4 யாம் பசித்தும் வருவேம் அல்லேம், எம்மால் பரிக்கப்படும் சுற்றமும் உடையேம் அல்லேம் பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12 பாரம் என்னுமூர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பானது பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத்து அன்ன – நற் 265/4,5 பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும் பாரம் என்னும் ஊரைப் போன்ற பாரம் பீரம் பைம் குருக்கத்தி – குறி 92 பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் - மத். 11:28 (Come to me, all you who are weary and burdened, and I will give you rest)
பாரத்து அன்ன ஆர மார்பின் - நற் 265/5 பாரத்து தலைவன் ஆர நன்னன் - அகம் 152/12 பாரம் பீரம் பைம் குருக்கத்தி - குறி 92 குடி புறந்தருநர் பாரம் ஓம்பி - பதி 13/24 பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி - புறம் 35/32 பசித்தும் வாரோம் பாரமும் இலமே - புறம் 145/4 வலி முன்னர் வை பாரம் இல் - பழ:234/4 பாரம் வெய்யோர்க்கு பாத்தூண் எளிது - முது:8 9/1 மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் - புகார்: 7/83,84 அகலிட பாரம் அகல நீக்கி - வஞ்சி:30/180 அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து - மணி:26/45 பவ்வத்து எடுத்து பாரம்-இதை முற்றவும் - மணி:29/26 வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை - சிந்தா:2 475/3 பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலா சுளிவின் மேலும் - சிந்தா:12 2461/2 பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே - சிந்தா:1 231/4 தோளும் மென் முலை பாரமும் தொல் நலம் - சிந்தா:7 1628/2
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி - தேவா-அப்:482/1,2 குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட - தேவா-அப்:636/1,2 பாரம் ஆக மலை எடுத்தான்-தனை - தேவா-அப்:1889/1 நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் - தேவா-அப்:2894/3 பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு - தேவா-அப்:167/3 கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு - திருக்கோ:59/1 படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் - திருக்கோ:136/1 பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை - திருமந்:273/3 பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே - திருமந்:452/4 பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் - திருமந்:1554/2 பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் - 1.திருமலை:4 9/2 ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல் - 3.இலை:3 97/1,2 பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை - 6.வம்பறா:1 717/1,2 முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு - 6.வம்பறா:1 1095/2,3 பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் - நாலாயி:840/1 பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் - நாலாயி:931/1 பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ - நாலாயி:1145/1 பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன் - நாலாயி:1496/1 மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் - நாலாயி:1525/1 பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் - நாலாயி:1756/1 மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் - நாலாயி:3493/1 மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் - நாலாயி:3790/2 பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் - திருப்:16/2 அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட - திருப்:27/1 பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய - திருப்:88/11 கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் - திருப்:153/1 குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் - திருப்:264/2 சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர் - திருப்:395/3 இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் - திருப்:692/2 சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை - திருப்:731/5 பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி - திருப்:735/5 மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி - திருப்:784/1 காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே - திருப்:806/2 வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி - திருப்:829/3 வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை - திருப்:859/6 அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் - திருப்:907/6 முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் - திருப்:927/2 கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம் - திருப்:979/2 இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே - திருப்:1051/3,4 காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே - திருப்:1105/8 வதறி சத்திக்க புளகித தன பாரம் - திருப்:1171/4 இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் - திருப்:1217/2 ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று - திருப்:1218/5 வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் - சீறா:946/3 எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன - சீறா:4734/2 பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் - வில்லி:1 96/4 என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் - வில்லி:10 5/1,2 பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா - வில்லி:27 32/2 மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே - வில்லி:44 62/2 தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி - வில்லி:46 242/3 பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப்பட கவள பாரமாய் விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் - வில்லி:4 54/1,2 பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசு படுத்து - வில்லி:26 16/2 ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் - வில்லி:46 183/1 அளக பாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணம் இவை எலாம் - கலிங்:53/1 பாரம் ஆகிய பல் காசு புதைஇ - இலாவாண:5/163 பாரம் ஆகிய ஈர தானையள் - மகத:5/19 பாரம் ஆகி நீர் அசைந்து ஒசிந்த - மகத:9/62 பாரம் தாங்கும் பழமை போல - மகத:19/36 படை கல பாரம் பற்பல சார்த்தி - மகத:27/60 சேடக வட்டமும் செம் நூல் பாரமும் தண்டும் வாளும் தளை இடு பாசமும் - உஞ்ஞை:46/58,59 குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த - பால:14 54/2 கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் - பால:21 17/1 குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய - அயோ:13 69/2 மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க - அயோ:14 60/1 அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் - கிட்:3 44/2 பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் - கிட்:3 71/3 பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து - கிட்:7 90/3 அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் - கிட்:7 142/1 பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப - கிட்:14 45/4 ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற - யுத்1:3 149/1 பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப - யுத்1:6 7/1 கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால் - யுத்3:29 44/1 மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி - யுத்3:31 226/2 அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் - யுத்4:38 34/4 பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் - கிட்:3 31/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்