சொல் பொருள்
(பெ) மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழக்கிய விலங்கு
சொல் பொருள் விளக்கம்
மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழக்கிய விலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trained animal used as a decoy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95 பார்வை மான் கட்டிய தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின் பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/1,2 பழக்கிய பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி நீண்ட கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்