சொல் பொருள்
கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது
குளம்
பாறை – தடை,வல்லுள்ளம்.
சொல் பொருள் விளக்கம்
பாறை என்பது கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது. மட்பாறை, மணற்பாறை, கற்பாறை என்பவை அவை. இப்பாறை குளம் என்னும் பொருளில் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காக உள்ளது. பாறையின் ஊடு அமைந்த குளம் ‘பாறை’ ஆயது. ‘கல் குளம்’ குமரி மாவட்ட ஊர்களுள் ஒன்று. பாறை, மலை ஆயவற்றின் இடையேயமைந்த நீர்நிலை சுனை எனப்படுதல் பொது வழக்கும், இலக்கிய வழக்குமாம்.
நீர் ஓட்டத்தைத் தடுக்கும் தடையாகப் பாறை அமைகின்றது. ஒரு வீரன் தாக்கும் போது தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒருவன் ஒரு பாறையைக் கவசம் (மெய்மறை) போலக் கொண்டான். நீ மலையையே மறைப்பாகக் கொண்டாலும் தப்பமாட்டாய் என்று வஞ்சினம் மொழிந்தான் வீரன் என்பது தகடூர்யாத்திரை. பாறையின் இத்தடுப்பினால் அதற்குத் தடை என்னும் பொருள் வழக்கில் உண்டாயிற்றாம். “பாறையாக அவர் நிற்கும் போது நாம் என்ன செய்வது” என்பது இயலார் ஏக்கம். “அவரோர் பாறை” என்பது வல்லுள்ளமாம் கல்லுள்ளம்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்