பிடவம் என்பதுஒரு மரம், அதன் பூ.
1. சொல் பொருள்
(பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ
2. சொல் பொருள் விளக்கம்
கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.
- முல்லை நிலத்தில் பூக்கும்
- மலைக்காட்டில் பூக்கும்
- மணல் வெளியிலும் பூக்கும்
- வழியெங்கும் பூத்துக் குலுங்கும்
- கார் பருவத்தில் மலரும்
- வானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும்
- மாலையில் மலரும்
- கூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும்
- இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும்
- செடியில் நீண்ட முட்கள் இருக்கும்
- செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும்.
- செடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும்.
- காம்பு நீளமாக இருக்கும்
- மொட்டுகள் கூர்மையாக இருக்கும்.
- வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும்.
- குளுமையும் நறுமணமும் கொண்டது.
- குலை குலையாகப் பூக்கும்
- பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும்
- பறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும். நன்றி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Bedaly emetic-nut, Randia malabarica, Benkara malabarica
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3 வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள் இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1 இலைகள் அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க. இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும். தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/1-3 மழை பெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு, உலர்ந்துபோன அடிப்பகுதியில் செழித்து வளர்ந்த முள்ளைப் புறத்திலே கொண்ட பிடவமும், கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று இந்தப்பூவின் மணம் நெடுந்தொலைவுக்கு மணக்கும் என்பர். கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 24,25 காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில், நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி நெருங்கிய கொத்துக்கொத்தாக இதன் பூ இருக்கும். புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/3,4 புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள் நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ. குலை குலையாகப் பூக்கும் பார்க்க : பிடவு
குல்லை பிடவம் சிறுமாரோடம் - குறி 78 வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்/மாலை அந்தி மால் அதர் நண்ணிய - நற் 238/3,4 மாலையில் மலரும் இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப - நற் 242/1 பிடவம் மலர தளவம் நனைய - ஐங் 499/1 கார் பருவத்தில் மலரும் சேவல் என பிடவம் ஏறி - கைந்:26/2 பிடவம் குருந்தொடு பிண்டி மலர - கைந்:36/1 வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் - சீறா:1000/3 பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க - தேவா-அப்:2183/3 பிடவமும் கொன்றையும் கோடலும் - நற் 99/9 கார் பருவத்தில் மலரும் பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே - ஐங் 435/3 முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்/களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று - கலி 101/2,3 செடியில் நீண்ட முட்கள் இருக்கும். தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும் - கலி 102/2 குளுமையும் நறுமணமும் கொண்டது. சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி - முல் 25 முல்லை நிலத்தில் பூக்கும். நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ - அகம் 23/4 ஆலலும் ஆலின பிடவும் பூத்தன - குறு 251/3 புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் - கலி 103/2 பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் - கிட்:10 46/4 தடவும் பிடவும் தாழ சாய்த்து - உஞ்ஞை:51/43 பிடவமும் தளவமும் முட முள் தாழையும் - மணி:3/163 பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த - மது:13/158 பல் பிடவத்து பனி மலர் மறுகி - மகத:1/194 முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும் - இலாவாண:12/18
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்